search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு பிரசவம்"

    • திருப்பதி சென்று திரும்பிய போது பெண் குழந்தை பிறந்தது
    • தாய், குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
    • ஆண் குழந்தை பிறந்தது

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா பெரியவரிகம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திகா கர்ப்பிணியான இவர் நரியாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரை மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்க இன்று காலை 108 ஆம்புலன்ஸ்க்கு பரிந்துரை செய்தனர். இதை அடுத்து மருத்துவ உதவியாளர் உமா மற்றும் டிரைவர் குமரவேல் ஆகியோர் 108 ஆம்புலன்சில் நரியாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு பிரசவ வலியில் இருந்த கீர்த்திகாவை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

    மசிகம் அருகே செல்லும் வழியில் கீர்த்திகாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் உமா பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் குழந்தையும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×